அரச மற்றும் தனியார் துறைகளை எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல், ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளை கவனத்தில் கொண்டு ரயில் சேவைகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ரயில் பயணிகளுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டே, விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ரயில் பருவச்சீட்டுகளை வைத்திருப்போர் மட்டுமே ரயில்களில் பயணிக்கமுடியும்.
ஐந்து விசேட ரயில் சேவைகள் மட்டுமே நடத்தப்படும்.
அந்த ரயில்கள், கண்டி, மஹவ, சிலாபம், அவிசாவளை மற்றும் பெலியத்த ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணிக்கும்,
கொழும்பு கோட்டையிலிருந்து மேலே குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு திரும்பும்
இந்த விசேட ரயில் சேவைகள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் தொடரும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.