கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) முதல் ஊரடங்கை தளர்த்தாமல் பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொழிலுக்கு செல்பவர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் அடையாள அட்டைகளின் இறுதி இலக்கங்களுக்கு அமையவே வீடுகளில் இருந்து வௌியேற முடியும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இருப்பிடத்தில் இருந்து மிக அருகில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு மாத்திரமே செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளின் பொருட்டு உணவு மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களை மாத்திரம் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கிணங்கவே வழமை போன்று நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.