தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம், நாளை 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல், தளர்த்தப்படவுள்ளது.
அதில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும், கொழும்பு, கம்பஹாவை தவிர ஏனைய இரண்டு மாவட்டங்களுக்குமான ஊரடங்கு சட்டம், அடுத்தவாரம் நடு பகுதியில் தளர்த்தப்படவுள்ளது.
மேலே குறிப்பிட்ட மாவட்டங்களை தவிர சகல மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம், நாளை (11) முதல் தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.