web log free
December 22, 2024

டி.வியை உடைத்த மொட்டு உறுப்பினருக்கு வலை

நபர் ஒருவரை தாக்கி, அவரது வீட்டிலிருந்த 52 அங்குலம் நீளமான டி.வியை அடித்துநொறுக்கிய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள மேற்படி சம்பவம் தொடர்பில், ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் உறுப்பினரை பொலிஸார் தேடிவருகின்றனர். 

இந்த சம்பவம் கடந்த 9ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீதியால் சென்றுகொண்டிருந்த மேற்படி நபரை வழிமறித்து தாக்குதல் நடத்திய மேற்படி நபர்கள், அவரை வீடு வரைக்கும் துரத்திச் சென்று வீட்டிலுள்ள டி.வியையும் உடைந்து நொறுக்கியுள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd