இந்தியாவில் கேரளா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில், அந்த மாநிலம் வெற்றிகண்டுள்ளது என்று ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணமடைவோரின் எண்ணிக்கை, இந்தியாவில் அதிகரித்து இருந்தாலும் கேரளாவில் அதற்கு எதிரான நிலைமையே இருந்தது.
வைரஸ்க்கு எதிரான செயற்பாடுகளில் அம்மாநில மக்கள் ஒன்றிணைந்திருந்தனர்.
இடதுசாரிகளே கேரளாவில் அதிகாரத்தை தமது கைகளுக்குள் கொண்டுவந்தனர்.
கேரளாவில் 10க்கும் குறைந்த கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்காக, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மாட்டு சிறுநீரை அங்குள்ளவர்கள் பருகுவது பிரசித்த காரணமாகும் என்றார்.