கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்கள் 55பேரும் சுகமடைந்து, வைத்தியசாலையிலிருந்து இன்று (10) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் அந்த வைத்தியசாலையில் 59பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் நால்வர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்தனர்.
ஆகக் கூடுதலான நோயாளர்கள், வைத்தியசாலையிலிருந்து குணமடைந்து வெளியேறியுள்ளமை காத்தான்குடி வைத்தியசாலையிலேயே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.