மேல் மாகாணத்தில், ஊரடங்கு சட்டம் நாளை (11) தளர்த்தப்படாது என்றாலும், மக்கள் தங்களுடைய பாதுகாப்பை பாதுகாத்துகொண்டு, அன்றாட தேவைகளில் ஈடுபடலாம்.
சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் விடுத்திருக்கும் அறிவுறுத்தலை பின்பற்றவேண்டும் எனத் தெரிவித்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, மக்களின் நடமாட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்காக, 10 ஆயிரம் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.