கொரோனா தொற்றுக்கு உள்ளான 8 பேர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர், டுபாயிலிருந்து அழைத்துவரப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள்.
ஏனைய ஆறுபேரும் கடற்படையினர் என அரசாங்க தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 855 ஆகும்.
வைத்தியசாலைகளில் இருந்து 321 பேர், வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
நேற்றையதினம் மட்டும் 1424 பேர், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.