அரசாங்கத்தினால் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், தங்களுடைய வாகனங்களை மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தேர்தல் நிறைவடையும் வரையிலும் பயன்படுத்தலாம். அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் முன்னாள் சபாநாயகருக்கும் அதற்கான அனுமதி கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சபாநாயர்கர் என்றடிப்படையில் கரு ஜயசூரிய ஆகிய எனக்கு வழக்கப்பட்ட வாகனம், காரியாலயம் மற்றும் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உள்ளிட்ட சகலதும், பாராளுமன்ற நிர்வாகத்திடம் மீளவும் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு வரபிரசாதங்களும் தனக்குத் தேவையில்லை என்றும் முன்னாள் சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.