பாராளுமன்றம் கலைத்தமை, பாராளுமன்றத்தை கூட்டாமை மற்றும் பொதுத் தேர்தலுக்கான திகதியை மாற்றியமை உள்ளிட்ட தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, அடுத்த 18ஆம் திகதியன்று விசாரணைக்கு ஏற்பதற்கு உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்மானித்தது.
மேற்படி விவகாரங்கள் தொடர்பில்,10க்கும் மேற்பட்ட தரப்பினர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.