web log free
December 22, 2024

23 மாவட்டங்களில் ஊரடங்கு மீண்டும் அமுல்

நாட்டின் 23 மாவட்டங்களில் இன்று (11) இரவு 8 மணி ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஊரடங்கு சட்டம்,  நாளை (12) அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இந்த மாவட்டங்களில் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி தொடக்கம் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு மீள அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், அத்தியாவசிய தேவைகள் இவ்விரு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டன. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd