தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, இன்றிரவு 7 மணிக்குப் பின்னர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலேயே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்த சந்திப்புக்குக்கு நேற்றையதினம் நேரம் ஒதுக்கி கேட்கப்பட்டிருந்தது எனினும், இன்றிரவு 7 மணிக்குப் பின்னரே, நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், இடம்பெற்ற சந்திப்பின் போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான விவகாரம் விரிவாக பேசப்பட்டது.
எனினும், தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை பிரதமர் மஹிந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்டிருந்தார்.
அந்த ஆவணங்களை கையளித்துவிட்டு, கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடுவதற்கே, மஹிந்தவை சுமந்திரன் சந்திக்கின்றார்.