தெரிவுசெய்யப்பட்ட சில நகரங்களுக்கு இடையில் விமான போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
லண்டன், டோக்கியோ, மெல்போர்ன் மற்றும் ஹொங்கொங் போன்றவற்றுக்கான விமான போக்குவரத்து இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளை (13) முதல் இந்த சேவைகள் ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.