பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கத்தை, தற்போதைக்கு வழங்கமாட்டேன் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அறிவித்துள்ளார்.
கட்சிகளின் செயலாளர்கள், சுயேட்சைக்குழுக்களின் பிரதிநிதிகளுக்கு இடையில், தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் தீர்ப்பு கிடைக்கும் வரையிலும் விருப்பு இலக்கம் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தேர்தலுக்கான நடவடிக்கைகள், தொடர்பில் ஆணைக்குழு மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
பொதுத் தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட மனுக்கள் மீதும் எதிர்வரும் 18 மற்றும் 19 ஆகிய இரண்டு தினங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.