பஸ்கள், ரயில்கள் சேவையில் ஈடுபட்டாலும் அதில் எவ்வாறு பயணிப்பது என்பது தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்குள் பயணிகள் போக்குவரத்து இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை.
ஏனைய மாவட்டங்களில், அரச மற்றும் தனியார் பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இதற்கான அனுமதி வழங்கப்படுவதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைக்கு செல்லும் ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.