ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர், எதிர்வரும் 19ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை உறுப்பினரும் அவருடைய ஆதரவாளரும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிலாபம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிலாபம்- குமாரக்கட்டுவ பிரதேசத்தில் வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த 19 வயதான நபரொருவர் மீது தாக்குதல் நடத்தி, அந்த நபரின வீட்டுக்குள் நுழைந்து 52 அங்குலம் கலர் டி.வி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்தனர் என இருவருக்கு எதிராகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த 9ஆம் திகதி இரவு இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, இவ்விருவரும் கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டனர்.