இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே தனது கடமைகளை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பொறுப்பேற்றார்.
தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் வீடியோ கான்பிரஸ் மூலமாக காண்பித்து கடமைகளை பொறுப்பேற்றார்.
தனி விமானத்தில், இலங்கைக்கு கையளிப்பதற்கான மருந்து பொருட்களுடன் வந்திறங்கிய அவர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். அதனால், நியமனக் கடிதத்தை நேரடியாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவில்லை.