முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, வாக்குமூலமளிப்பதற்காக, குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சற்றுமுன்னர் வந்தடைந்தார்.
புத்தளத்தில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பதற்காக பயண ஏற்பாடுகளை செய்திருந்தமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
புத்தளத்திலிருந்து மன்னாருக்கு 22 பஸ்களில் மக்களை ஏற்றிசென்றதன் ஊடாக 95 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கு அனுமதியளித்தமை தொடர்பிலேயே முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.