கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன சார்பில், மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பிணை வழங்கவேண்டும் என்று கோரியே அவருடைய சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய பிணை உத்தரவை, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (13) இரத்து செய்து, கைது செய்வதற்கான உத்தரவை சி.ஐ.டியினருக்கு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, இரத்து செய்யுமாறு கோரியே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்கள் விளக்கமறியல் உத்தரவின் பேரில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர்,கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரைக்கும் சிறைச்சாலை பஸ்ஸிலேயே ஏற்றிச் செல்லப்பட்டார்.
இதனால், அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.