web log free
April 16, 2026

வெளியேறினார் மங்கள சமரவீர

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

புத்தளத்தில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பதற்காக பயண ஏற்பாடுகளை செய்திருந்தமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு 22 பஸ்களில் மக்களை ஏற்றிசென்றதன் ஊடாக 95 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கு அனுமதியளித்தமை தொடர்பிலேயே முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd