சிறுவர்கள் மத்தியில் காணப்படும் ஓவியத் திறனை ஊக்குவித்து வெளிக் கொணரும் வகையில், ஓவியப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
COVID-19 தொற்று பரவும் நிலையில், பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளன. சமூக தூரப்படுத்தல் செயற்பாடுகள் பின்பற்றப்படுவதால் சிறுவர்கள் தமது வீடுகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். ஓவியம் என்பது தமது ஆக்கத்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஒரு ஆக்கபூர்வமான செயற்பாடாக அமைந்துள்ளதுடன், பாதுகாப்பான வகையில் தமது உணர்வுகளை சிறுவர்களை வெளிப்படுத்தக்கூடிய ஒரு பொழுது போக்கு அம்சமாகவும் அமைந்துள்ளது.
”வண்ணமயமான வாழ்க்கை” எனும் தலைப்பில் இந்த போட்டியில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பங்கேற்று, இவ்வாறான சூழலில் தாம் பெற்றுள்ள அனுபவம் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தி தமது ஓவியங்களை வரைந்து சமர்ப்பிக்க முடியும்.
இந்த போட்டியில் பங்கேற்பது என்பது மிகவும் எளிமையானது. 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அனைவரும் இந்த போட்டியில் பங்கேற்றகலாம். எவ்வாறாயினும், ஒரு நபரினால் ஒரு ஆக்கத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும். ஓவியம் பூர்த்தியடைந்த பின்னர், அதனை புகைப்படமெடுத்து, This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 2020 மே மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப முடியும். புகைப்படத்தின் அளவு ஆகக்கூடியது 25MB ஆக இருக்க வேண்டியது. மின்னஞ்சலில் சிறுவரின் பெயர், வயது மற்றும் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும்.
பின்வரும் வயது பிரிவுகளின் பிரகாரம் ஒரு வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார்: 6 வயது வரை, 7-11 வயது வரை, 12 – 15 வயது வரை. கவர்ச்சிகரமான மற்றும் பெறுமதியான பரிசுகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும். தெரிவு செய்யப்படும் சகல ஆக்கங்களும், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் Facebook பக்கத்தில்: https://www.facebook.com/EUDel.Srilanka.Maldives பதிவேற்றம் செய்யப்படும். மேலதிக தகவல்களை Facebook பக்கம் மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இணையத்தளம்: https://eeas.europa.eu/delegations/sri-lanka_en ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.