web log free
April 10, 2026

நாடு திரும்பிய 2 பேருக்கு கொரோனா- மொத்தம் 981

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 11 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் இலண்டனிலிருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 981ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை 538 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 434 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd