web log free
December 23, 2024

பாக்.வீரர்கள் மூவர் ஒப்பந்தங்களை இழந்தனர்

பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் ஆமிர், வஹாப் றியாஸ், ஹஸன் அலி ஆகியோர் தமது மத்திய ஒப்பந்தங்களை இழந்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் தலைவரான சஃப்ராஸ் அஹமட், சுழற்பந்துவீச்சாளர் யசீர் ஷா ஆகியோர் பிரிவு ஏயிலிருந்து பிரிவு பிக்கு கீழிறக்கப்பட்டதுடன், துடுப்பாட்டவீரர் இமாம்-உல்-ஹக் பிரிவு பியிலிருந்து சிக்கு கீழிறக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கான அணித்தலைவர் அஸார் அலியும், பிரிவு பியிலிருந்து பிரிவு ஏக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர். தவிர பிரிவு ஏயில் பாபர் அஸாம் ஏற்கெனவே காணப்படுகின்றார்.

இந்நிலையில், வளர்ந்து வரும் பிரிவில் வேகப்பந்துவீச்சாளர்கள் மொஹமட் ஹஸ்னைன், ஹரிஸ் றாஃப், துடுப்பாட்டவீரர் ஹைதர் அலி ஆகியோர் வளர்ந்துவரும் பிரிவில் இடம்பெற்றுள்ளதோடு, வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா பிரிவு சியில் இடம்பெற்றுள்ளார்.

இதேவேளை, துடுப்பாட்டவீரர்கள் அபிட் அலி, ஷண் மசூட், மொஹமட் றிஸ்வான் உள்ளிட்டோர் பிரிவு சியிலிருந்து பிரிவு பிக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவராக பாபர் அஸாம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சஃப்ராஸ் அஹமட்டை அணித்தலைவராகப் பிரதியிட்டுள்ளார்.

இவ்வாண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கும் 2020-21 பருவகாலத்துகான அணித்தலைவராக பாபர் அஸாம் நியமிக்கப்பட்டுள்ளார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd