வெளிநாடுகளில் உள்ள 39,000 இலங்கையர்கள் வரையில் மீண்டும் இலங்கைக்கு வர ஆவலுடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் 3000 மாணவர்களும், குறுகிய கால விசாக்களை பெற்று வெளிநாடுகளுக்கு சென்ற 4000 பேரும், தொழிலுக்காக சென்ற 28,000 பேரும் அடங்குவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு அறிமுகப்படுத்திய ´இலங்கையை தொடர்பு கொள்ளுங்கள்´ என்ற இணைய பக்கத்தின் ஊடாக இதுவரை 78,000 பேர் வரையில் பதிவுச்செய்துக்கொண்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு இழைக்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.