இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஹோமாகம தியகம என்ற இடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்ட நிலப்பகுதியை கௌரவ
உயர்கல்விரூபவ்தொழில் நுட்பம்ரூபவ் புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள்ரூபவ் மாநகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி திரு. பிரியந்த பந்துவிக்ரமரூபவ் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. பிரசாத் ரணவீரரூபவ் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் திரு.சமின் சில்வாரூபவ் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சிலரின் பங்களிப்புடன் இன்றைய தினம் (17.05.2020) பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ உயர்கல்வி தொழில் நுட்பம் புத்தாக்கம் மற்றும் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
ரூபவ் 'நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் பாரிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இந்த விளையாட்டு மைதானத்திற்காக 26 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
பகல் இரவு போட்டிகளை நடத்தக்கூடிய வகையில் இந்த விளையாட்டு மைதானம் நிர்மாணிக்கப்படும் என்றும்ரூபவ் முதற்கட்டத்தின் கீழ் போட்டியை பார்வையிடும் சுமார் நாற்பதாயிரம் (40000) பேருக்கான வசதிகளைக் கொண்டதாகவும் ரூபவ் இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் இருபதாயிரம் (20000) ஆசனங்களை ஒன்றிணைத்து மொத்தமாக 60000 பார்வையாளர்களின் ஆசனங்களை கொண்ட வசதிகளை உள்ளடக்கியதாக இந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இந்த பாரியளவான விளையாட்டு அரங்கத்தை நியமிப்பதற்கு தற்போதைக்கு ஏற்பட்டுள்ள தேவை என்ன என்றும் அவர் வினவியுள்ளார்