web log free
December 23, 2024

ஈஸ்டர் தாக்குதல்- 5 பேரை தேடி வேட்டை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 63 பேரையும் எதிர்வரும் ஜூன் 1 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு  காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.சி. றிஸ்வான் இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், நீதிமன்ற  பிணையில் சென்று நீதிமன்றில் சமூகமளிக்காத 5 பேருக்கும் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கடந்த 21.4.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரானின் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த  64 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 59 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற் கொண்ட ஆசாத்தின் தாயார் உட்பட 4  பேர் விளக்கமறியலில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த 4 வெவ்வேறு வழக்கு இலக்கங்களை கொண்ட 68 பேரின் வழக்குகள் இன்று  (18) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்   விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அவர்கள் வெவ்வேறு மாவட்டத்திலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள  கொரோனா வைரஸ் காரணமாக நீதிபதியின் ஆலோசனைக்கமைய அழைத்து வரமுடியாத காரணத்தினால் சிறைச்சாலை அதிகாரிகள்  ஏற்பாட்டில்  காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் 63 பேரையும் எதிர்வரும் 1 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்..

அதேவேளை உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான்  குழுவில் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்த 64 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 5 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் இன்றைய தினம்  நீதிமன்றில் ஆஜராகாததையடுத்து அவர்களை கைது செய்யுமாறு நீதவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd