நாடு திரும்பிய எனது மகளை, கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று, வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டேன். தனிமைப்படுத்தல் முகாமுக்கு செல்வதற்கு விடவில்லை என வெளியாகியுள்ள செய்தி, பொய்யாகும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
என்னுடைய மகள், வெளிநாட்டிலேயே இருக்கிறாள். அவளுக்கு இன்னும் பரீட்சை முடியவில்லை. என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், தனது பதவியை இராஜினாமா செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தான் இன்னும் நாடு திரும்பிவில்லை என்றும், வெளிநாட்டிலேயே இருக்கின்றேன் என்றும், அவருடைய மகள், சமூக வலைத்தளங்களில் வீடியோவை தரவேற்றம் செய்துள்ளார்.