தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல், ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தன்னுடைய மகளுடன் வருகைதந்திருந்தமையால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக, 14 நாட்கள் அவருடைய மகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிறைவடைந்தன் பின்னர், மேலும் 14 நாட்களுக்கு தனிமையில் இருப்பதற்கான அனுமதியுடன், தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அவர் அழைத்து செல்லப்பட்டார்.
அவருடைய மகளை, யாழ்ப்பாணம் நல்லூர் விலாசத்திலுள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துசெல்வதற்கான யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலக வானமொன்றில் கொழும்புக்கு திரும்பிய ஹூல், தன்னுடைய மகளுடன் ஆணைக்குழுவுக்கு வந்துள்ளார்.
இதுதொடர்பில் தகவல் கிடைத்ததும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
சிரேஷ்ட அதிகாரிகளின் தலையீட்டால், அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அதனையடுத்து ஆணைக்குழுவின் கட்டடத்தொகுதி முழுவதும் கிருமி தொற்றொழிப்பு தெளிக்கப்பட்டது.