கொரோனா வைரஸை ஒழிக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் முன்னெடுக்கப்படும் அதேவேளை, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான நகர்வை முன்னெடுக்கின்றனர்.
கட்சிகளின் அங்கத்தவர்கள் உறுப்பினர்களை தம்முடன் இழுத்தெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதனடிப்படையில், மாத்தளை நாவுல பிரதேசத்தைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் 20 பேர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டுள்ளனர.
மொட்டுக் கட்சியின் லக்கல பிரதேச வேட்பாளர் திலக் பண்டாரவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ள அவர்கள், நாவுலயிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று, வெற்றிலை கொடுத்து கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் தமக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டதாகவும் அதனைக் கருத்திற்கொண்டுடே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்