வெலிசர கடற்படை முகாமிலிருந்து, மேலும் 2193 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துசெல்லப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றியிருந்த சிப்பாய்களுடன் மிகவும் நெருங்கிய பழகியிருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
சுகாதாரப் பிரிவின் பணிப்புரையின் பேரில், கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்கும் வகையிலேயே அவர்கள் அனைவரும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையினரில் 578 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 237 கடற்படையினர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சுகமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
கடற்படையினர் 341 பேர், வைத்தியசாலைகளில் இன்னும் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.