ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்தால், உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதியாக, ஜனாதிபதி சார்பில், சட்ட மா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தினேஷ் பதிரண ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், அரசமைப்பின் பிரகாரம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பொதுத் தேர்தலை நடத்தி, புதிய பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தல் நடத்தப்படாதுள்ள நிலையில், ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறு உத்தரவிடுமாறும் கோரியே, இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.