எமது நாட்டின் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்கள், போதைப்பொருள் வர்த்தர்கள் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைதுசெய்யப்பட்டமைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு பலரும் தயாராக இருக்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் இன்றைக்கு பலவருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டதாக, அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார் என்று சுட்டிக்காட்டியே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஏனையவர்கள் செய்தவற்றில் சந்தோஷமடைவதற்கு நிறைய பேர் உள்ளனர். ஏனையவர்கள் செய்தவற்றுக்கு சந்தோஷமடைவதை போலவே, நாங்கள், தாங்கள் செய்தவற்றுக்காக சந்தோஷமடைய வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
டுபாயில், எமது நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர்கள், பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு, பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு பலரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். எனினும், வேலைச் செய்து, தான் செய்தவற்றுக்காக, தானே சந்தோஷமடைய வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதன்போது தெரிவித்தார்.'