லங்கா IOC நிறுவனத்தினால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பட்டுள்ளது.
லங்கா IOC நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்று 5 ரூபாயில் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த வாரம் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலையை 5 ரூபாயினால் அதிகரிக்க லங்கா IOC நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக்கட்சியின் 2003ஆம் ஆண்டு அரசாங்கத்தின் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இலங்கையின் நிதியமைச்சுக்கு அறிவிக்காமலேயே விலையை அதிகரிக்கும் அதிகாரத்தை லங்கா ஐஓசி நிறுவனம் கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.