பாராளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் வேட்பு மனுக்கள் கோரப்படுமாயின், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடும்.
இதுதொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு, ஜனநாயகமானது. ஆகையால் குறைகளை திருத்திக்கொண்டு முன்னோக்கி பயணிப்பதற்கான செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
ஐக்கிய தேசியக் கட்சியை சீரழிப்பது என்பது ராஜபக்ஷர்களை பலப்படுத்துவறத்கு சமனானதாகும். இது யாருடைய ஒப்பந்தத்தில் செய்யப்படுகின்றது என்பது தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்கள் சிந்தித்து செயற்படவேண்டும் என்றார்.