நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்றை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ளது.
அதனடிப்படையில், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரையும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போல, 24 ஆம் திகதியும் 25ஆம் திகதியும் முழுநாளும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
26ஆம் திகதி அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையிலும் அமுலில் இருக்கும்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையும் 26ஆம் திகதி முதல் ஈடுபடும்.
எனினும், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இந்த போக்குவரத்து ஈடுபடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.