web log free
June 26, 2026

மதுஷ் சகாக்களின் வீட்டில் ஆயுதங்கள் சிக்கின


டுபாயில் கைதுசெய்யப்பட்ட தெற்கைச் சேர்ந்த பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் மாகந்துரே மதுஷ் என்பவரது சகாக்களின் வீடுகளிலிருந்து ஆயுதங்கள் மற்றும் ஒருதொகை இராணுவ சீருடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என மாத்தறை பொலிஸ் அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

மதுஷ் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, மாத்தறை மாவட்ட முழுவதும் கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மதுஷ் வீட்டைச் சுற்றி, சி.சி.டி.வி பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தன்னுடைய குழந்தைகளையும் மதுசங்க, டுபாய்க்கு அழைத்துச் சென்றுவிட்டார். அவர்களை மீட்டெடுத்து தன்னிடம் ஒப்படைக்குமாறு, மதுஷின் முதலாவது மனைவி, பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுஷின் சகாக்களின் வீடுகளிலிருந்து இராணுவச் சீருடைகள்-9, பெண்கள் அணியும் சீருடைகள்-3, இராணுவம் பயன்படுத்தும் முக கவசங்கள் இரண்டு, இடுப்புப் பட்டிகள் இரண்டு, ரி-56 ரக ரவைகள்-32, டிரில் வகையைச் சேர்ந்த ரவைகள்-11, வெற்றுத்தோட்டாக்கள்-37 உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd