web log free
December 18, 2025

“தீர்ப்புக்கு பின் 70 நாட்களில் தேர்தல்”

பாராளுமன்றம் கலைப்பு மற்றும் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்குகளின் விசாரணைகள் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 22ஆம் திகதி வரையிலும்  தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது. 

அடுத்த விசாரணை, எதிர்வரும் 26ஆம் திகதியன்று இடம்பெறும்.

அந்த விசாரணைகள் நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னரே, தேர்தல் எப்போது நடத்தப்படவேண்டும் என்ற திகதியை அறிவிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் 70 நாட்களுக்கு பின்னரே, தேர்தலை நடத்தமுடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணி்ப்பாளர் சமன் ரத்னாயக்க தெரவித்தார். 

இதேவேளை, தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில், சுகாதார அதிகரிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

 

வாக்காளர்கள், அதிகாரிகள்,பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அவ்வாறான நடைமுறை கடைப்பிடிக்கப்படுமாயின் தேர்தல் செலவுகள் அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளார். 

Last modified on Monday, 01 June 2020 13:42
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd