web log free
January 11, 2025

புலிகள் கட்சியின் உறுப்பினர் மரணம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தாமோதரம்-மனோகரன் இன்று ஞாயிற்றுக்கிழமை(24)மாலை காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தாமோதரம் மனோகரன் காலமாகியுள்னார்.45 வயதான அவர் 3 பிள்ளைகளின் தந்தையாவர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (24) மாலை அவர் சங்கர்புரம் கிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு றாணமடு பகுதியிலுள்ள வயலுக்குச் சென்றுள்ளார். வயலுக்குச் சென்றவர் மாலை வேளையாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் வயலுக்குச் சென்று பார்த்தவேளை அவர் வீழ்ந்து கிடந்துள்ளார்.பின்னர் உடனடியாக களுவாஞ்சிகுடி வைத்தியாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளதாக,  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மனோகரன் அவர்கள் நெஞ்சு வலி தொடர்பாக சிசிச்சை பெற்று வந்துள்ளார். இவர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.எனினும் மரணத்திற்கான உறுதிப்படுத்தப்பட்ட காரணம் பிரதே பரிசோதனையின் பின்னர்தான் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சடலம் தற்போது களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd