குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்ணொருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இந்த பெண் பயாகலையை சேர்ந்தவர் ஆவார்.
இன்று அதிகாலை திடீரென சுகயீனமுற்ற இவரை இராணுவம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது இந்த உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பில், சீனக்குடா பொலிசாருக்கு இராணுவம் அறிவித்துள்ளது.
இவருடன் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று காத்தான்குடி வைத்தியசாலையில் ஏற்கனவே சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.