இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்துவருவதை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
அதன் முதல்படியாக கட்டாரிலிருந்து, நாட்டுக்கு அழைத்துவருவதற்கு தயாராக இருந்த விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஆகையால், இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களுக்கு உடனடியான தங்குமிடவசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு இலங்கைக்கான பதில் தூதுவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.