ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியை மறுசீரமைக்கும் விடயத்தில் அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் முதல் அங்கமாக, கட்சியின் செயற்குழுவை அவசரமாக கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளார்.
அந்த கூட்டத்தின் போது முக்கியமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
அதில், புதிய கட்சியின் கீழ் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை நீக்குவதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கே, செயற்குழுவை கூட்டவுள்ளார்.
முதலாவதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை நீக்குவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும்.
அதன்பின்னர் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கும் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.