கோவிட்- 19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று நாட்டில் அனைவரும் முகக் கவசத்தை அணியும் கட்டாயத்தில் உள்ளோம்.
இந்நிலையில், இரண்டு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு முகக் கவசம் அணிவதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.
அத்துடன், சுவாசக் கோளாறு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக 2 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு முகக் கவசம் அணிவதனை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.