web log free
December 23, 2024

உலக சுகாதார ஸ்தாபனம் அபாய எச்சரிக்கை

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் தாக்கம் குறைவடையாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ, பி.பி.சிக்கு அளித்த செவ்வியில் இதனை கூறியுள்ளார்.

தனி ஒருவர் சமூகத்தில் நடமாடுவது அதிகரிப்பதால் வைரஸ் பரவல் விரைவில் அதிகரிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பயணக் கட்டுப்பாடுகளை குறைத்திருந்தாலும் முடிந்தளவு சமூக இடைவெளியை பேணுவதி அத்தியாவசியம் எனவும் அவரர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவருக்கு நோய் அறிகுறிகள் காணப்படின் அவர் உடனடியாக தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் கொவிட் -19 தொற்று நோயின் வீரியம் குறைவடைந்து வருவதை கருத்தில் கொண்டு சில நாடுகள் வெளிநாட்டு பயண கட்டுப்பாடுகiளை தளர்த்தியுள்ளன ஆனால் அந்த நாடுகளிலிருந்து  புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd