நுவரெலியா நிர்வாக மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று (29) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் 2020.05.31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்தள்ள அறிக்கை பின்வமாறு:
2020.05.29 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் 2020.05.31 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் நடைமுறைப்படுத்தும் வகையில் நுவரெலியா நிர்வாக மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பதை தவிர்ந்த நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய அனைத்து போக்குவரத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படுகின்றது.
ஊரடங்குச் சட்டம் விதிக்கப்படுவது தொடர்பாக இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைவாக விதிக்கப்படும் ஊரடங்கு சட்டம் அந்த வகையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று மேலும் அறிவிக்கப்படுகிறது.