web log free
December 23, 2024

கொட்டகலையில் தொண்டமானுக்கு இறுதி கிரியை

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (30) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரபட்ட அன்னாரின் பூதலுடல் நேற்று (29) வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது. 

மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடும், இந்து மத முறையிலான கிரியைகளும் இடம்பெற்றன. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதந்து அஞ்சலி செலுத்தினார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதலுடல் தாங்கிய பேழையுடன் நான்கு வாகங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சிஎல்எப் வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இடையில் எங்கும் வாகனம் நிறுத்தப்படவில்லை.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நாளை மாலை 4 மணிக்கு நோர்வூட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd