ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர்களில் 40க்கும் மேற்பட்டவர்களே இவ்வாறு கொண்டுவரவுள்ளனர்.
இந்த தகவலை சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (29) இந்ததீர்மானம் எடுக்கப்பட்டது என்று அந்த தகவல் தெரிவித்தது.
அதற்கமைய அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் டீல்களில் ஈடுப்பட்டுவரும் ஐ.தே.க.வைச் சேர்ந்த குழுவினருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.