மதுபானசாலைகளும் இறைச்சி கடைகளும் பூட்டப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொசொன் உற்சவத்தை முன்னிட்டு ஜூன் 5ஆம் திகதியும் மறுநாள் 6ஆம் திகதியும் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் யாவும் மூடப்பட்டிருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி கடைகள் மட்டுமன்றி, கொலை களன்கள், பந்தய திடல், கெகினோ மற்றும் இரவு விடுதிகள் யாவும் மூடப்பட்டிருக்கும்.