மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி அவர் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழே, இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிங்கலே அமைப்பினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.