இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் வகித்த பதவிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதன்பிரகாரம், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக மறைந்த ஆறுமுகன் தொண்டமான் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.