ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நாடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் உயர்நீதிமன்றம் இன்று (02) தீர்ப்பு வழங்கவுள்ளது.
பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இன்று மாலை 3 மணிக்கு தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி ஆகியவற்றை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் கடந்த 10 நாட்கள் பரிசீலனைகள் இடம்பெற்றன.
இதனையடுத்து, குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று (01) மாலை நிறைவடைந்தன.